உள்ளூர் செய்திகள்
- முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
- சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொற்று கண்டறியப்படும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலை யங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்டவற்றில் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் சளிமாதிரி சேகரிக்கப்படுகின்றன.
வேலூர் மாவட்டத்தில் நேற்று செய்யப்பட்ட பரிசோத னையின் முடிவில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.