உள்ளூர் செய்திகள்

குடிசை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்த காட்சி.

100 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-10 14:47 IST   |   Update On 2023-03-10 14:47:00 IST
  • 108 கலசத்திற்க்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த குடிசை கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா நடைப்பெற்றது.

அணைக்கட்டு தாலுக்கா குடிசை கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் 2 நாட்களுக்கு முன்பாகவே அமைக்க ப்பட்ட யாகசாலையில் 4 கால பூஜைகள் செய்து, அங்கு வைக்குப்பட்டு இருந்த 108 கலசத்திற்க்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்ட புனித நீரை மேல்தளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் கோபுரத்தை அடைந்தது. பின்னர் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டு இருந்த விமான கலசத்தின் மீது புனித நீர் தெளித்து தீபாரா தனை காட்டப்பட்டது.

பின்பு முலவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழா வை மேட்டுக்குடிகள் திருப்பதி, சாந்தகுமார், தர்மகத்தா கணபதி, முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமைதாங்கி நடத்தி இருந்தனர்.

விழாவில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன் ஆகியோர் உட்பட திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News