உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்ட பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Published On 2023-09-10 09:54 GMT   |   Update On 2023-09-10 09:54 GMT
  • வெயிலின் தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டுள்ளது
  • முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க பொதுமக்கள் வலியுறுதல்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கடலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (48). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செல்வி 100 நாள் வேலைக்கு சென்றார்.

வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி கிழே விழுந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கி ருந்தவர்கள் உடனே செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மராட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், '100 நாள் வேலைக்கு செல்வோர் அவசரத்தில் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் செல்விக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒரு பிரச்னையும் இல்லை. சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலே போதும்' என்றனர். பணியின்போது பெண் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாக 100 நாள் வேலை என்பது பெரும்பாலும் ஏரி, குளம், குட்டை, ஆற்று கால்வாய் போன்ற நீர் நிலை பகுதிகளில் தான் வேலை நடக்கும். அப்போது, பணியாளர்கள் வேலை செய்து கொண் டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விஷப்பூச்சி கடிப்பது, உடைந்த கண்ணாடி பாட்டில் குத்தி கொள்வது போன்றவை நடக்கிறது.

அவ்வாறு நடக்கும் போது ஆஸ்பத்திரி செல்ல அதிக நேரம் ஆவதால் 100 நாள் வேலை நடக்கும் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News