உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி. 

கள்ளக்குறிச்சியில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-30 12:55 IST   |   Update On 2022-11-30 12:55:00 IST
  • கள்ளக்குறிச்சியில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியி டங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட கோரி தமிழக அரசை வற்புறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சர்ச்சில் காரல் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட சட்ட செயலாளர் முனியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வில்வபதி வரவேற்றார்.

ஆர்ப்பா ட்டத்தில் ஆசிரியர்க ளுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணியும் வழங்காதே. ஜூலை 1-ல் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவி லைப்படி உயர்வை உடனடியாக நிலுவைத் தொகையுடன் வழங்கிடு. ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியி டங்களை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு சான்றிதழ் பெறுவதற்கு தேவையற்ற புதிய, புதிய சிக்கல்களை சேர்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர் உள்ளங்களை புண்ப டுத்துவதை உடனடியா க கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரி க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News