அம்மனுக்கு சக்தி அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்.
வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழாவிற்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழமையான திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. க்ஸ்
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழமையான திரவுபதி யம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழமையான திரவுபதி யம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் மகாபாரத கதாபாத்திர கடவுள்களுக்கு மரச்சிற்பங்கள் அமைத்து, பாதுகாத்து வழிபட்டு வருகின்றனர்.
மேலும் தீமிதித் திருவிழாவில், பாரம்பரிய முறைப்படி ஓதுவார்களை கொண்டு மகாபாரத சொற்பொழிவு நடத்தப்ப டுவதும் வழக்க மாக இருந்து வருகிறது.
இதன்படி, இக்கோவில் தீமிதி திருவிழா வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அம்ம னுக்கு சக்தி அழைத்தல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது. மேள வாத்தி யங்கள், வாண வேடிக்கை முழங்க நடைபெற்ற சக்தி அழைப்பு மற்றும் பூச்சாட்டு விழாவில், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவை யொட்டி, மகாபாரத சொற்பொழிவு தொடங்கி யது. தீமிதி திருவிழாவில் நேர்த்திக்கடன் தீர்க்க, தீ மிதிக்க விரும்பும் பக்தர்கள் வரும் 17-ந் தேதி காப்பு கட்டி கொண்டு, விரதம் இருந்து, தீ மிதிக்கலாம் என கோவில் பெரியதனக்கா ரர்கள் தெரிவித் துள்ளனர்.