உள்ளூர் செய்திகள்

விழாவில் வைகுண்டர் வள்ளலார் ஒப்பிட்டு நூல் வெளியிடப்பட்டது.

வள்ளலார் 200-வது ஆண்டு நிறைவு விழா

Published On 2023-10-27 09:26 GMT   |   Update On 2023-10-27 09:26 GMT
  • பேச்சு போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  • முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் வள்ளல்பெருமான் வருவிக்கஉற்ற 200-வது ஆண்டு நிறைவு விழா, மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

Vallalar 200th Anniversary Celebrationநிகழ்விற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளு வன் தலைமை தாங்கினார். பதிவாளர்(பொ) முனைவர் இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார்.

புலமுதன்மையர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். தொ டர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஞானதீபத்தை துணைவேந்தர் திருவள்ளுவன் ஏற்றித் தலைமையுரை ஆற்றினார்.

தொடர்ந்து தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகளின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய வைகுண்டர் வள்ளலார் ஓர் ஒப்பீட்டு நூல் வெளியிடப்பட்டது.

நூலின் முதல் படியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் வெளியிட துணைவேந்தர் திருவள்ளுவன் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினராக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் புதல்வர் ராஜாராமலிங்கம், வடலூர் சங்க கெளரவத் தலைவர் ராமதாஸ், வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல், மருத்துவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாகக் காலையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிப் பேச்சுப் போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேல் கலந்து கொண்டனர்.

அதில் முதல் பரிசு 30,000, இரண்டாம் பரிசு 20,000, மூன்றாம் பரிசு 10,000 மற்றும் ஆறுதல் பத்துப் பரிசுகள் தலா 1000 என்கிற வகையில் வழங்கப்பட்டன.

நிகழ்வின் ஏற்பாடுகளை வடலூர் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம், பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன், மஞ்சுளா, சங்கரராமன், கவிஞர் வெற்றிச்செல்வன், கவிஞர் யோகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News