உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்
- தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- 50--க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
அரூர்,
அரூரை அடுத்த அள்ளாலப்பட்டியில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
விழிப்புணர்வு முகாமில், மாற்று ஊடக மைய இயக்குநரும், பேராசிரியருமான காளீஸ்வரன் பேசுகையில், கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்த வரும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஆக்சன் எய்ட் மற்றும் சிஸ்கோ தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, கிராமப் பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதில், 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.