ஊத்தங்கரை ஆர்.பி.எஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
- பள்ளி மாணவி அமிர்தா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
- சமூக அறிவியலில் ஒரு மாணவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆர்.பி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவி அமிர்தா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் பாடவாரியாக தமிழ் 97 ஆங்கிலம் 97 கணிதம் 100 அறிவியல் 99 சமூக அறிவியல் 100 என மொத்தம் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் கணிதத்தில் இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறும், அறிவியலில் இரண்டு மாணவர்களும், சமூக அறிவியலில் ஒரு மாணவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பொன்னுசாமி, பள்ளியின் முதல்வர் நிர்மலா, துணை முதல்வர் சக்திவேல், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பாராட்டி நினைவு பரிசை வழங்கினர்.