மல்லிப்பட்டினம்- மனோரா சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மல்லிப்பட்டினம் மனோரா அமைந்துள்ளது.
சுற்றுலா தளம் என்பதால் மனோராவுக்கு தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடல் பகுதியில் நடைமேடை அமைக்கப்பட்டு படகில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருந்தும் கடல் பகுதியில் அதிகமாக சேர் உள்ளதால் யாரும் இறங்க முடியாத நிலை உள்ளது. இதனால் இங்கு வருவதற்கு பலரும் அச்சப்படுகின்றனர்.
மேலும், மல்லிப்பட்டினம்- மனோரா சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏதுவாக மல்லிப்பட்டினம்- மனோரா சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அரசியல் ஆலோ சனை குழு உறுப்பினர் முகமது காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.