உள்ளூர் செய்திகள்

கோவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆய்வு

Published On 2022-10-08 15:09 IST   |   Update On 2022-10-08 15:09:00 IST
  • மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
  • அதிகாரிகளிடம் திட்டங்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார்

கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், அதன் வளர்ச்சிகள் தொடர்பாகவும் அரசு துறை அதிகாரிகளிடம் மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா கேட்டறிந்தார்.

பின்னர் அதிகாரிகளிடம் திட்டங்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். மேலும் இலங்கை அகதிகள் முகாம் தொடர்பாக அதில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா உக்கடம் வாலங்குளம், ஆர்.எஸ்.புரம் டி.பி ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News