உள்ளூர் செய்திகள்

உடன்குடி அனல்மின் நிலைய பணிகளை சட்டமன்ற உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் ஆய்வு செய்த காட்சி.

உடன்குடி அனல் மின் நிலையம் 2025-ம் ஆண்டு  செயல்படும் - சட்டமன்ற உறுதிமொழி குழுத்தலைவர் தகவல்

Published On 2023-11-03 08:35 GMT   |   Update On 2023-11-03 08:35 GMT
  • உடன்குடியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  • கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

உடன்குடி:

உடன்குடியில் ரூ.9,250கோடி மதிப்பீட்டில் 1301மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலை யம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பணிகள் இரவு, பகலாக நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது.

சட்டமன்ற குழு ஆய்வு

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் சேலம் வடக்கு அருள், அண்ணாநகர் மோகன், நாமக்கல் ராமலிங்கம், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களுடன் கலந்துரையாடி பணிகள் குறித்து கேட்டிறிந்தனர்.

இதில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் அஸ்ஸாப்கல்லாசி, மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News