உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே 2 சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடமாடின
- 7 அடி நீளமுள்ள இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடமாடின
- 30 நிமிடங்களுக்கு மேல் நடனமாடியதை கிராம பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூர் மொத்த பால் உற்பத்தியாளர் சங்கம் அருகே சாலை ஓரம் உள்ள வயல்வெளி பகுதியில் சுமார் 7 அடி நீளமுள்ள இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடமாடின.
பெரும்பாலும் நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் மட்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து நடனமாடுவது வழக்கம்.
ஆனால் இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடிய அழகை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் இந்த நிகழ்வு நீடித்தது. இதையடுத்து 2 பாம்புகளும் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றன. இரண்டு பாம்புகள் 30 நிமிடங்களுக்கு மேல் நடனமாடியதை பட்டறை பெருமந்தூர் கிராம பொதுமக்கள் திரளாக கூடி ஆச்சரியமாக கண்டு ரசித்தனர்.
சிலர் தங்களது செல்போனில் வீடியோ படமாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட முகநூலில் பதிவிட்டு வைரலாக்கினர்.