உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேரையும், அவர்களை ைகது செய்த போலீசார்களையும் படத்தில் காணலாம்.

ஓசூரில் இரு சக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் கைது

Published On 2023-08-10 15:59 IST   |   Update On 2023-08-10 15:59:00 IST
  • ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார், சிப்காட் பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர்.
  • விசாரித்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என தெரிந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடப்பதாக புகார் வந்ததையடுத்து, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார், சிப்காட் பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர்.

அப்போது, 2 பேர் இரு சக்கர வாகனங்களில் வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். விசாரித்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என தெரிந்தது.

மேலும், விசாரணையில் தின்னூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது25) மற்றும் இந்த வாகனங்களை திருடுவதற்கு சாவியை செய்து கொடுத்த தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஷேக் காதர் (33) என்பதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து, பல்வேறு இடங்களில் அவர்கள் திருடிய 20 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News