உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பறிமுதல் செய்தது முண்டந்துறை சிறுத்தையின் தோலா? - வனத்துறையினர் விசாரணை

Published On 2022-10-20 08:11 GMT   |   Update On 2022-10-20 08:11 GMT
  • தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 42) . இந்து அறநிலையத்துறை அலுவலக தற்காலிக உதவியாளர்.
  • ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தையின் தோலுடன் நின்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 42) . இந்து அறநிலையத்துறை அலுவலக தற்காலிக உதவியாளர்.

இவர் நேற்று ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தையின் தோலுடன் நின்று கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் சிறுத்தை தோலை நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கி இருந்ததாக அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் நோய்வாய்ப்பட்டு இறந்த சிறுத்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது வேட்டையாடி எடுக்கப்பட்டு உள்ளதா?, எந்த பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் தோலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயமோ? அல்லது வெட்டுக்காயங்களோ இல்லை.

எனவே அது உடல்நலக்குறைவால் இறந்த சிறுத்தையின் தோலாக இருக்கலாம் எனவும், இறந்த சிறுத்தை முண்டந்துறை வனப்பகுதியில் வசித்த சிறுத்தையாக இருக்கலாம் எனவும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News