உள்ளூர் செய்திகள்

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர்.

தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் ெபாங்கல் போனஸ் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை ேதால்வி

Published On 2023-01-08 08:47 GMT   |   Update On 2023-01-08 08:47 GMT
  • குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலைகளில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர்.
  • இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்பட வில்லை என கூறப்படுகிறது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில்

ஆலைகளில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டி ருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யச்சொல்லி தாசில்தார் சண்முகவேலுவிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி குமாரபா ளையம் தாலுகா அலுவல கத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து நேற்று தாசில்தார் மற்றும் நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர் நந்தன் தலைமையில் 2-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் விசைத்தறி உரிமையா ளர்கள் பங்கேற்கவில்லை. செயற்குழு கூட்டம் நடத்தி, நாளை மறுநாள் (10-ந்தேதி ) தகவல் தெரிவிப்பதாக உரிமையாளர்கள் கடிதம் அனுப்பினர். இதனால் 2-ம் கட்ட முத்தரப்பு கூட்டம் ேதால்வியில் முடிந்தது. 

Tags:    

Similar News