உள்ளூர் செய்திகள்

போலி தங்க நகை கொடுத்து பணம் கேட்ட முதியவர் கைது

Published On 2023-10-01 11:44 IST   |   Update On 2023-10-01 11:44:00 IST
  • முசிறி அருகேபோலி தங்க நகை கொடுத்து பணம் கேட்ட முதியவர் கைது
  • முதியவர் ஒருவர் மோதிரத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டுள்ளார்

முசிறி, 1-

முசிறி அருகே உள்ள தும்பலம் குடித்தெவை சேர்ந்த வர் நித்தியானந்தம் ( வயது 37). இவர் தங்க நகை அடகு பிடிக்கும் கடை வைத்திருக்கிறார்.இந்நிலையில் இவரும் இவரது கடையில் வேலை பார்க்கும் விஜயலட்சுமி என்பவரும் கடையில் இருந்த போது, முதியவர் ஒருவர் மோதிரத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது மோதிரத்தை பெற்றுக்கொண்டு சோதித்த நித்தியானந்தம் மோதிரம் போலியானது என்பது தெரிய வந்தது. உடனே அவர் தனது சங்க உறுப்பினர்கள் மற்றும் முசிறி போலீஸ் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் முசிறி போலீசார் முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (72) என்பது தெரிய வந்தது. இவர் பல்வேறு இடங்களில் போலி நகையினை வைத்து பணம் பெற்றவர் என கூறப்படுகிறது. முதியவர் ராஜாராமை கைது செய்த போலீசார் ,அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Tags:    

Similar News