உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி, பெண் உதவியாளர் மீது தாக்குதல்

Published On 2023-08-30 14:26 IST   |   Update On 2023-08-30 14:26:00 IST
  • லால்குடி அருகே கிராம நிர்வாக அதிகாரி, பெண் உதவியாளர் மீது தாக்குதல் நடைபெற்றது
  • தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்கு டி அருகே டி.கல்வி க்குடி வருவாய் கிராம கிராம நிர்வாக அதிகாரி சரவணன் (48). கடந்த 2 வருடங்களாக பணிபுரியும் இவர், நத்தமா ங்குடி பகுதியையும் பார்த்து வருகிறார்.இந்நிலையில், நத்தமா ங்குடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் எழில்நி லவன் (வயது33). இவர் தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெற, சில ஆவ ணங்கள் தேவைப்படு வதால், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு சரவணனை அணுகியுள்ளார்.அப்போது, கலைஞர் உரிமை தொகை திட்டத்தி ற்கு விண்ணப்பித்த பெண்க ளின் விவரங்கள் சரிபா ர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் வருமாறு சரவணன் கூறினார்.இதையடுத்து, 2 நாட்கள் கழித்து சரவணனிடம், இன்றைக்காவது மின் இணைப்பு பெற ஆவணங் களை தருமாறு கேட்டுள் ளார். அதற்கு விஏஓ சரவ ணன் இன்றும் பணிகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.இதனால், கோபமடைந்த எழில் நிலவன் அந்த வேலை தான் முக்கியமா? என் வேலை முக்கியம் இல்லையா? என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, சரவ ணணை தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற கிராம உதவியாளர் கோகிலாவை யும் தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த சரவணன், கிராம உதவியா ளர் கோகிலா ஆகியோர் லால்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் லால் குடி போலீசார் வழக்கு செய்து விஏஓ சரவணன், கிராம உதவியாளர் கோகிலா ஆகியோரை தாக்கிய வாலிபரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News