உள்ளூர் செய்திகள்

சபரிமலை அய்யப்பனுக்கு திருக்கல்யாணம்

Published On 2022-12-19 14:57 IST   |   Update On 2022-12-19 14:57:00 IST
  • சபரிமலை அய்யப்பனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
  • தர்ம சாஸ்தா பக்த ஜனசங்கம் சார்பில்

திருச்சி

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீதர்ம சாஸ்தா பக்த ஜனசங்கம் சார்பில் சபரிமலை அய்யப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை, லட்சார்ச்சனை மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கும் பூர்ணாம் பாளுக்கும், புஷ்கலாம்பாளுக்கும் திருக்கல்யாணம் திருச்சி திருவானைக்காவல் விபூதி பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசுமங்கலி மஹாலில் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ப்ரணவானந்தா சுவாமிகள் தலைமையிலும் வில்லிவாக்கம் பிரம்மஸ்ரீஸ்ரீ விஸ்வநாதசர்மா ஆசியுடன் சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீ அய்யப்ப பஜனை சங்கம் சிவராஜ் சர்மா தலைமையிலும் ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ ஹரிஹர புத்தரரின் திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஜம்புநாதன் (எ) ஸ்ரீதர், நாகநாதர் கேட்டரிங் குமார், ராஜகோபாலன், ராமச்சந்திரன், வேங்கடரமணி, ஸ்ரீதர், மணிகண்ட சாஸ்திரிகள், நாராயண ஐயர், டி.பி.ஆர்.ஜி.சக்தி. பொன்ராஜ், ராஜகோபால் ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, லட்சார்ச்சனை, தீபாரதனை, அய்யப்பன் வீதி உலா நடைபெற்றது.

மாலை ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்றது. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News