உள்ளூர் செய்திகள்
- துவாக்குடி பகுதியில 11ந்தேதி மின் நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக செயற்பொறியாளர் விளக்கம்
திருச்சி,
திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 11ந்தேதி செவ்வாய்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை, நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தான் மேடு, பெல்நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி செக்டார் மற்றும் ஏ, இ, ஆர் மற்றும் பிஎச் செக்டார், என்.ஐ.டி., துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பெய்கைக்குடிஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.