உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் மீது 7 பிரிவுகளில் போலீஸ் வழக்கு

Published On 2023-09-05 15:11 IST   |   Update On 2023-09-05 15:11:00 IST
  • விவசாயிகள் மீது 7 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
  • வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்

திருச்சி:

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக நேற்று 39 வது நாள் போராட்டத்தில் , விளை பொருக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று கூறி, வெண்டைக்காயை மாலையாக அணிந்தும், சாலையில் கொட்டியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில்காவல்துறையினரின் தடையை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று

அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாடைகட்டி, உடலில் மருத்துவ சிகிச்சைக்கான துணியை சுற்றிக்கொண்டு, ஒப்பாரிவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News