உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகைக்குசேர்ந்த 100 டன் கூடுதல் குப்பைகள்

Published On 2023-11-13 07:55 GMT   |   Update On 2023-11-13 07:55 GMT
  • திருச்சி மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையால் சேர்ந்த 100 டன் கூடுதல் குப்பைகள்
  • அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்

திருச்சி,

திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம், ஸ்ரீரங்கம், பொன்மலை, காட்டூர் என 5 கோட்டங்கள் உள்ளன.இங்கு 2 அரை லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு நான் ஒரு முதல் 450 டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் மாநகரின் அனைத்து தெருக்களிலும் மேலும் 100 டன் பட்டாசு கழிவுகள், புத்தாடை வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியது.

திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடைவீதி, சத்திரம் சத்திரம் பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் தேங்கி கிடந்தன. இதனை அப்புறப்படுத்தும் பணியில் இன்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மாநகரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News