உள்ளூர் செய்திகள்
3 நாய் குட்டிகளை அடித்து கொன்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் கைது
- 3 நாய் குட்டிகளை அடித்து கொன்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார்
- குடிபோதையில் மரக்கட்டையால் தாக்கியுள்ளார்
திருச்சி:
திருச்சி முனிசிபல் காலனி பூசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 32). இவர் தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வருகிறார். அதில் சமீபத்தில் ஒரு நாய் 6 குட்டிகளை ஈன்றது. அந்த நாய் குட்டிகள் அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் வீரா என்கிற வீரையன் (22) என்பவர் குடிபோதையில் மரக்கட்டையால் 3 நாய்க்குட்டிகளை கொடூரமாக அடித்து கொன்றார். இதுகுறித்து லதா கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து வீரையனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.அவர் மீது கோட்டை ,பாலக்கரை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.