உள்ளூர் செய்திகள்

மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்து ரூ. 19 லட்சம் மோசடி

Published On 2023-09-09 15:19 IST   |   Update On 2023-09-09 15:19:00 IST
  • மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்து ரூ. 19 லட்சம் மோசடி செய்துள்ளனர்
  • 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

திருச்சி:

திருச்சி காட்டூர் கோகுல் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 70). இவர் தனது வீட்டு தேவைகளுக்காக திருச்சி நந்தி கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வங்கி கிளையில் லோன் கேட்டார். அப்போது வயது முதிர்வு காரணமாக லோன் வழங்க நிர்வாகம் மறுத்தது.

இந்த நிலையில் திருச்சி அண்ணா சிலை பூசாரி தெரு புதுவை நகரை சேர்ந்த அவரது உறவினர் ராஜேந்திரன் என்பவர் அந்த மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து திருச்சி சிந்தாமணி காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர ராஜ் (38) என்பவரை அறிமுகம் செய்தார்.

பின்னர் மகேந்திர ராஜ் அந்த மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்து ரூ.38 லட்சம் கடன் வாங்கி ரூ. 19 லட்சத்தை மூதாட்டி இடம் வழங்கிவிட்டு, ரூ. 19 லட்சத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் லோன் தவணை கட்டுவதாக கூறினார்.

பின்னர் மகேந்திர ராஜ், அமிர்தராஜன் ஆகியோர் அந்த தொகையை பங்கு போட்டு எடுத்துக்கொண்டு வங்கி கடன் தவணையை கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமி திருச்சி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டின் கோட்டில் புகார் கொடுத்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், மகேந்திரராஜ், அமிர்தராஜன், ராஜேந்திரன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News