உள்ளூர் செய்திகள்

ராட்சத கிரேன் வாகனத்தில் பயங்கர தீ

Published On 2023-05-13 12:22 IST   |   Update On 2023-05-13 12:22:00 IST
  • கல்லக்குடி சுங்கச்சாவடியில் பரபரப்பு
  • திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி,

ராமேஸ்வரத்திலிருந்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு ஒரு ராட்சத கிரேன் வாகனம் வந்து கொண்டிருந்தது. இதனை உத்திர பிரதேச மாநிலம் ஜோகன்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கிரேன் வாகனம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி அருகே உள்ள கீழரசூர் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது அந்த கிரேன் வாகனத்தின் எஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த புள்ளம்பாடி மற்றும் டால்மியாபுரம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர்கள் பாரதி, சிவக்குமார் தலைமையில் அசாருதீன், ரமேஷ், குமார், கனகராஜ், அருண்ராஜ்,பிரகாஷ் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து நுரை கலவையை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கிரேன் வாகனம் முற்றிலும் இருந்து நாசமானது. தீ விபத்துக்குள்ளான ராட்சத கிரேன் வாகனம் 200 டன் எடை கொண்டது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News