உள்ளூர் செய்திகள்
இருசக்கர வாகன மோதி தொழிலாளி படுகாயம்
- ராம்ஜிநகர் அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது இருசக்கர வாகன மோதி படுகாயம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர
ராம்ஜிநகர்,
திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரியநாயகி சத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது32) கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு கள்ளிக்குடியில் உள்ள தனது நண்பரைப் பார்த்துவிட்டு பேருந்து ஏறுவதற்காக திருச்சி திண்டுக்கல் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே இனாம் குளத்துறைச் சார்ந்த அக்பர் பாஷா என்பவரது மகன் சுல்தான் (24) திருச்சியில் இருந்து இனாம்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக நடந்து சென்ற ராஜேஷ் கண்ணா மீது இருசக்கர வாகன மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ராம்ஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.