உள்ளூர் செய்திகள்
மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை
- திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- அவரது சகோதரர் பால்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் விசாரணை நடத்தி வருகின்றார்
திருச்சி,
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சூசைராஜ் (வயது 35). இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று 2-வது திருமணம் செய்து விட்டார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சூசைராஜ் திருப்பூரில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்தார். பின்னர் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் பால்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் விசாரணை நடத்தி வருகின்றனர்.