உள்ளூர் செய்திகள்
ஜவுளிக்கடை ஊழியர் வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு
- திருச்சி மேல சிந்தாமணியில் ஜவுளிக்கடை ஊழியர் வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு
- மனைவி வீட்டை பூட்டி விட்டு டைப்ரைட்டிங் மையத்துக்கு சென்று விட்டார்
திருச்சி
திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 38 ).இவர் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு டைப்ரைட்டிங் மையத்துக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மூன்றே முக்கால் சவரன் தங்க நகைகள் மற்றும் சில்வர் பொருட்கள், பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ராஜேந்திரன் கோட்டை குற்றப்பிரிவுபோலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.