உள்ளூர் செய்திகள்

துறையூரில் பேட்டரி திருடியவர் கைது

Published On 2022-08-07 14:58 IST   |   Update On 2022-08-07 14:58:00 IST
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது பரூக் (25) என்பவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
  • பேட்டரியை கழட்டி வர சொன்னதாக கூறி, சுமார் 1 லட்சம் மதிப்புள்ள நான்கு பேட்டரிகளை திருடி சென்று விட்டார்.

திருச்சி :

திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32). இவர் அப்பகுதியில் போர்வெல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரிடம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது பரூக் (25) என்பவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கொரோனா கால ஊரடங்கின்போது பாலகிருஷ்ணனுக்கு உரிய வருமானம் இல்லாததால், முகமது பருக்கை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று முசிறி பிரிவு ரோடு அருகே பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான போர்வெல் வண்டி நின்றிருப்பதை அறிந்த முகமது பருக், அங்கு சென்று அங்கிருந்த வட மாநில தொழிலாளர்களிடம் பாலகிருஷ்ணன் வண்டியில் உள்ள பேட்டரியை கழட்டி வர சொன்னதாக கூறி, சுமார் 1 லட்சம் மதிப்புள்ள நான்கு பேட்டரிகளை திருடி சென்று விட்டார்.

பின்னர் லாரியை பார்வையிட சென்ற பாலகிருஷ்ணன் லாரியில் பேட்டரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த தொழிலாளர்களிடம் கேட்ட பொழுது, நீங்கள் பேட்டரியை கழட்டி வர சொன்னதாக கூறி முகமது பருக் பேட்டரியை கழற்றிச் சென்றதாக கூறியதை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் முகமது பருக்கை கைது செய்து, அவர் திருடிச் சென்ற நான்கு பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News