உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

Published On 2023-08-29 13:38 IST   |   Update On 2023-08-29 13:38:00 IST
  • திருச்சியில் அரசு பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்று உள்ளது
  • பஸ் படிகட்டில் நின்ற இளைஞர்களை மேலே ஏறச்சொன்னதால் ஆத்திரம்

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை அண்ணா நகரை சேர்ந்ததிருமுருகன் (வயது 43) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் .திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி அரசு டவுன் பஸ்சை ஓட்டி சென்றார்.பஸ் மெயின் கார்ட்கேட்டு தாண்டி தேவர் ஹால் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத 4 பேர் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது டிரைவர் மற்றும் கண்டக்டர் படிக்கட்டில் பயணம் செய்தவர்களை கண்டித்து பஸ்ஸுக்குள் ஏறுமாறு கூறினர். இதனால் டிரைவருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி டிரைவர் திருமுருகன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் திருமுருகன் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News