திருச்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சொந்தமான வீடு
- முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்
திருச்சி
வேலூர் கலெக்டர் அலுவலக அருகே ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணி–களுக்கு நிதி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.இதில் திட்ட இயக்குனராக ஆர்த்தி பணியாற்றி வருகி–றார். தர்மபுரியில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. குடும்பத்தினரும் அங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஆர்த்தி சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் சத்துவாச் சாரியில் உள்ள ஆர்த்தி வீட்டிற்கு இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்தனர். வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (72). இவர் ஆர்த்தியின் தந்தை ஆவார். மகள் ஆர்த்தி மற்றும் மருமகன் ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறை–யினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான கலைமணி வீட்டில் திருச்சி மாவட்டலஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. மணிகண்டன், ஆர்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூரியூர் பகுதியில் 72 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைக்க இடம் வாங்கியது உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.