உள்ளூர் செய்திகள்
பள்ளியில் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
துருக்கி- சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
- கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
- காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு அரசு உதவி பெறும் சுந்தரேசவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பள்ளி ஆசிரியர் வசந்தா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.