பேரணியை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
வாசுதேவநல்லூரில் பழங்குடியினர் பெருமை தின விழா - கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- தலையனை பகுதி மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தர கோரிக்கை வைத்தனர்.
- 49 குடும்பம் வசிக்கும் தலையனை பகுதியில் 15 வீடுகள் மட்டும் உள்ளன.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் பழங்குடியினர் பெருமை தின விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பழங்குடியினரை பெருமைப்படுத்தும் விதமாக பழங்குடியினர் பெருமை தின விழா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-
தலையனை பகுதி மக்கள் புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூர் வழியாக தலையனை வரை பஸ் வசதியும், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் பஸ் இயக்கப்படும் எனவும், 49 குடும்பம் வசிக்கும் தலையனை பகுதியில் 15 வீடுகள் மட்டும் உள்ளன. கூடிய விரைவில் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பழங்குடியினர் பெருமை தின விழா பேரணியில், சிவகிரி தலை யணை, கடையநல்லூர் கலைமான்நகர் பளியர் ஆகிய இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது, வாசுதேவநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், தென்காசி தனி தாசில்தார் (ஆதிந) முருகசெல்வி, சங்கரன்கோவில் தனி தாசில்தார் (ஆதிந) பரிமளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி காப்பாளர்கள், அலுவ லர்கள், பழங்குடியின மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் பாண்டியன், தலையனை பள்ளியின் முன்னாள் தலை மை ஆசிரியரும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜ்மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் வாசு தேவநல்லூர் பாலகணேஷ், திருமலாபுரம் முருகானந்தம், நாரணபுரம் 2 கனகவள்ளி, வருவாய் ஆய்வாளர் வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.