உள்ளூர் செய்திகள்

கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2023-08-24 09:35 GMT   |   Update On 2023-08-24 09:35 GMT
  • வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக் கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும்.
  • இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் விஜயன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் அருள்மணி விவசாயிகள் கரும்பு சாகுபடி தொழில்நு ட்பத்தை கடைப்பிடித்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அங்கக வேளாண், சிறுதானிய ஆண்டு ஆகியன குறித்து எடுத்துரைத்தார்.

உழவன் செயலி விழிப்புணர்வு மற்றும் பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் குறித்து தருமபுரி வேளாண்மை துணை இயக்குநர் குணசேகரன் விவசாயிகளுக்கு கூறினார்.

பாப்பாரப்பட்டி வேளா ண்மை அறிவியல் நிலை யத்தினர் கூறுகையில் தருமபுரி மாவட் டத்தில் கரும்பில் வேர்புழுவின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

இது மறுதாம்பு கரும்பில் அதிகம் இருக்கும். இதனை கட்டுப்படுத்த பேவேரியா பேசியனா அல்லது மெட்டா ரைசியம் அனிசோ பிலே, லெக்கானி சிலியம் போன்ற வற்றை ஒரு கிலோ உயிர் கொல்லிக்கு 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, நிழலில் வைத்து மூன்று தினங்களுக்கு பிறகு வயலில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக் கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும். பயிர் சுழற்சி செய்வதன் மூலம் இதனை கட்டுபடுத்தலாம் எனக் கூறினார்.

கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் அலுவலர் கேசவன் நாற்றங் காலில் தரமான நாற்று உற்பத்தி, கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கரும்பு நுனி கிள்ளுதல், பராமரிப்பு மேலாண்மை ஆகியன குறித்து எடுத்துரைத்தனர்.

இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் விஜயன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

பயிற்சியில் வேளாண் அலுவலர், கரும்பு உதவி அலுவலர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News