உள்ளூர் செய்திகள்

மயிலாடும்பாறைக்கு நாளை மரபு நடை

Published On 2023-05-05 15:13 IST   |   Update On 2023-05-05 15:14:00 IST
  • காணத்தக்க கிருஷ்ணகிரி' என்கிற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
  • கலெக்டர், உயர்அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.

கிருஷ்ணகிரி,

'காணத்தக்க கிருஷ்ணகிரி' என்கிற விழிப்புணர்வு சுற்றுலா திட்டத்தின் கீழ் மயிலாடும்பாறைக்கு நாளை(சனிக்கிழமை) மரபு நடை மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'காணத்தக்க கிருஷ்ணகிரி' என்கிற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சரா பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தொகரப்பள்ளி நடுகற்கள், ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு, பாறை ஒவியங்கள், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு மரபு நடை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், கலெக்டர், உயர்அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இத்திட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு நமது மாவட்டத்தின் தொன்மையின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு மரபு நடை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News