உள்ளூர் செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Update: 2022-08-13 10:33 GMT
  • சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  • பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.

தஞ்சாவூர்:

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்வர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.

இந்த நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பலர் தங்களது குடும்பத்தி னருடன் வந்தனர். பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.

கோவில் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலையில் இதை விட கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் தஞ்சை மணிமண்டப பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Tags:    

Similar News