உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-12-12 14:33 IST   |   Update On 2022-12-12 14:33:00 IST
  • கடும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.
  • சுற்றுலாத்தலங்களை குடை பிடித்தவாறு குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனா்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடா் சாரல் மழையும் கடும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. மேலும் அதிகாலையில் கடுங்குளிரும் வாட்டுகிறது.

இந்த குளு,குளு சீசனை அனுபவிக்க வார இறுதி நாட்களில் தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளிமாவ ட்டங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் அதிகள வில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

நேற்று விடுமுறை என்பதால் இங்குள்ள முக்கியச் சுற்றுலாத்தலங்களை குடை பிடித்தவாறு குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்ட பெட்டா, படகு இல்லம், டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் பெய்த சாரல் மழையின் காரணமாக குளிா்ந்த காலநிலை நிலவியது. இந்த குளிா்ந்த கால நிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்ததோடு, சாரல் மழையில் குடையைப் பிடித்தவாறு முக்கிய இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனா்.

Tags:    

Similar News