உள்ளூர் செய்திகள்

தஞ்சை அண்ணாசாலையில் குவிந்து கிடக்கும் பட்டாசு, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு கழிவுகள் அகற்றம்

Published On 2023-11-13 10:11 GMT   |   Update On 2023-11-13 10:11 GMT
  • தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.
  • தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

தஞ்சாவூர்:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டாடப்பட்டது.

மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.

அதனை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சை மாநகராட்சியில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரை வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 100 முதல் 120 டன் குப்பை வரும். 51 வார்டுகளிலும் சேகரிக்கக் கூடிய குப்பை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு தரம் பிரிக்கப்படும். கடந்த சில நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது.

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தது மற்றும் துணிமணிகள் விற்பனை பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வழக்கமாக சேகரமாகும் குப்பைகள் என தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

இதில் பட்டாசு கழிவுகள் மட்டும் சுமார் 20 டன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் 600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு மேற்கொள்ள ப்பட்டது.

கழிவுகளை கொண்டு செல்வதற்காக 40 கனரக வாகனங்கள் பயன்ப டுத்தப்பட்டன.

Tags:    

Similar News