உள்ளூர் செய்திகள்

கோயம்பேட்டில் தக்காளி விலை அதிகரிப்பு

Published On 2023-01-25 10:16 GMT   |   Update On 2023-01-25 10:16 GMT
  • கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது.
  • வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-வரையிலும் விற்கப்படுகிறது.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. இன்று 64 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது.

கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலை அதிகரித்து ரூ.30-க்கு விற்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை காரணமாக விவசாய தொழிலாளர்கள் தக்காளி அறுவடை செய்வதற்கு அதிகளவில் செல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்தது. தற்போது தக்காளி வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இன்று காலை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை ஆனது. வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-வரையிலும் விற்கப்படுகிறது.

மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி லோடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News