உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தெற்கு மடவளாகத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45).
இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.