உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் பதுக்கிய ரூ.25 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-09-26 08:19 GMT   |   Update On 2022-09-26 10:24 GMT
  • அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.
  • 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமாரின் உத்தரவு படி "ஆப்ரேஷன் கருடா" என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை அழித்து வருகின்றனர்.

அந்த வகையில் சிறப்பு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் ஆவூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டின் முன் பகுதியில் டீ தூள் மற்றும் கோதுமை மாவு போன்ற பொருட்களை ஏஜெண்ட் எடுத்து செய்வது போல், பொதுமக்களை நம்ப வைத்து, வீட்டின் மற்ற அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.

இதில், 65 மூட்டைகள் மற்றும் 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் ரூ. 25 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News