உள்ளூர் செய்திகள்

பி.ஆர்.பாண்டியன் பேட்டி அளித்தார்.

கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Update: 2022-06-30 09:56 GMT
  • புதிய நடைமுறையாக முன்பணம் செலுத்தி விட்டுதான் உரங்களை பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குறிப்பாக கிராம பகுதியில் விவசாய தேவைக்கு உரங்கள் பெறுவதில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறிருப்பதாவது

தமிழகத்தில் வேளாண்மை க்கு என்று தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டது. ஆனால் வேளாண் சார்ந்த பல்வேறு துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் உள்ளது. அதாவது உரம் சம்பந்தப்பட்டதற்கு வேளாண் துறையும், அதனை விற்பதற்கு வேறு துறையும் என ஒவ்வொன்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். உரம் வினியோகம் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர்கூ ட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ங்கள் உரங்களை விநியோகம் செய்துவிட்டு அதற்குப் பிறகு பணம் பெற்றுக் கொள்வர். ஆனால் தற்போது புதிய நடைமுறையாக முன்பணம் செலுத்தி விட்டுதான் உரங்களை பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நலிவடைந்த சில கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை சங்கங்களால் முன்பணம் செலுத்த முடிவதில்லை. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குறிப்பாக கிராமப் பகுதியில் விவசாயத் தேவைக்கு உரங்கள்பெறு வதில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.எனவே உடனடியாக தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை சங்கங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கி முன்பணம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உறவினியோகம் சீராக இருக்கும்.கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கரும்புக்கான நிலுவைத் தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது. குருங்குளம் சர்க்கரை ஆலைகள் மட்டும் ரூ.21 கோடி நிலுவைத் தொகை உள்ளது. தமிழக அளவில் ரூ.340 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை உள்ளது. அதனை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குவழங்கிட நடவடிக்கை எடுக்க வே ண்டும்.கூட்டுறவு சங்கங்களில் நடைபெறுகின்ற ஊழல் முறைகேடுகளை தடுக்க வேண்டும்இன்று மத்திய அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் 3 மாத காலத்துக்குள் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று ஜல்சக்தி துறை தெரிவித்துள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பை திரும்ப பெறவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News