தீவனப்புல் வளர்க்க ரூ.1.7 லட்சம் ஒதுக்கீடு
- ரூ.1 கோடி செலவில் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்ப ட்டுள்ளது.
- பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பி னராக சேர வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின்படி, 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கரணைகள் ரூ.1 கோடி செலவில் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்ப ட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில், 17 நபர்களுக்கு ரூ.1.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கரணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரை ப்பார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பி னராக சேர வேண்டும்.
பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறணை களுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகிய வற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானியத் தொகைக்கு ட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் மாடி, கிருஷ்ணகிரி என்ற முகவரியை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.