உள்ளூர் செய்திகள்

மாநில கல்வி கொள்கையை வகுப்பதற்கான உயர்மட்ட குழுவிற்கு கருத்துக்களை அனுப்ப கருத்து கேட்பு கூட்டம் -கிருஷ்ணகிரியில் 26-ந் தேதி நடக்கிறது

Published On 2022-10-23 12:55 IST   |   Update On 2022-10-23 12:55:00 IST
  • கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
  • கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி,

மாநில கல்வி கொள்கையை வகுப்ப தற்காக அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழுவிற்கு கருத்துக்களை அனுப்பு வதற்கு கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் உயர் மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News