உள்ளூர் செய்திகள்
30 ஆண்டு கால பழமை வாய்ந்த மரம் வீட்டின் மேற்கூரையில் விழுந்து கடும் சேதம்
- அந்த வீட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்ததால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
- தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தீயணைப்பு படையினர் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்.
பொன்னேரி:
கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொன்னேரி அடுத்த தத்தை மஞ்சி கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் செல்வி என்பவர் வீட்டில் சுமார் 30 ஆண்டு பழமையான மரம், வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதில் வீடு முழுவதும் சேதமானது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனை அடுத்து பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் வந்த தீயணைப்பு படையினர், 8 மணி நேரமாக மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மீட்பு பணியின் போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.