உள்ளூர் செய்திகள்

மரம் விழுந்து தொழிலாளி பலி

Published On 2023-03-01 15:31 IST   |   Update On 2023-03-01 15:31:00 IST
  • காப்பு காட்டில் மரம் வெட்டிய போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெட்டியா ந்தொழுவம் கிராமத்தில் அடந்த காப்பு காடு உள்ளது.

இந்த காப்பு காட்டில் தைலம் மரங்கள் வெட்ட கரூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித மில் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

மேலும் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அய்யசாமி உள்ளிட்ட 25 நபர்கள் ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தைலம் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று வெட்டியாந்தொழுவம் காப்புகாட்டில் தைலம் மரங்களை வெட்டிய போது எதிர்பாரதவிதமாக மரம் அய்யசாமி மீது மரம் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அய்யாசாமியை உடன் இருந்த கூலி தொழிலாளிகள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே அய்யசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலிறந்து வந்த ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் வழக்கு பதிந்து சக தொழிலாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஆரணி அருகே மரம் வெட்டிய போது தொழிலாளி மீது விழுந்ததில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இறந்த அய்யசாமிக்கு செல்வியம்மாள் என்ற மனைவியும் வெங்கடேஷ், பிரகாஷ் என்ற 2 மகன்களும் கவிதா என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News