உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர்.
ஏரி, குளங்களில் 6 மாதங்களுக்கு மேல் நிரம்பி நிற்கும் தண்ணீர்
- பரவலாக மழை பெய்து வருகிறது
- தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சி
கண்ணமங்கலம்:
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள், குளங்கள் தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது.
குறிப்பாக கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஏரி, இதனருகே உள்ள குளம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும் தண்ணீர் வற்றாமல் நிரம்பிய நிலையில் உள்ளது. மேலும் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக கண்ணமங்கலம் வழியாக செல்லும் நாகநதி ஆற்றில் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
இனி வரும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களும் மழை மாதம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை என மக்களிடையே கருத்து நிலவி வருகிறது.