உள்ளூர் செய்திகள்

சாதி சான்று கேட்டு பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-13 15:04 IST   |   Update On 2022-09-13 15:04:00 IST
  • வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது
  • 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

செய்யாறு:

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் இணைந்து பழங்குடி மாணவர்களுக்கு சாதி சான்று கேட்டும், பட்டா மற்றும் வீடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும், செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பழங்குடியினர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மேளதாளத்துடன் நடனமாடினர்.

மன்னர் காலத்தில் காட்டிற்குவரும் அரசனை டோலி வைத்து பழங்குடியின மக்கள் தூக்கி செல்வார்கள் என்பதை நினைவுபடுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் டோலிவைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமாரிடம் மனு கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ரா.சரவணன், மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து, பி.செல்வம், டி.கே.வெங்கடேசன், அய்யனார், விஜயா, அப்துல் காதர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News