செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- கல்லூரி முதல்வர் தகவல்
- நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் ந.கலைவாணி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
2022 - 23 ம் கல்வியாண்டிற்கான முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழிட்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tngasapg.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும்.
அதேப் போல் இளநிலைப் பிரிவில் கலை வணிகவியல், மொழிப் பாடம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள சில இடங்களுக்கான மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகள்் காலையில் வரவேண்டும். அனைத்து மாணவர்களும்கொ ரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்கள் கல்லூரிக்குள் வர அனுமதி கிடையாது.
மாணவர்கள் சேர்க்கையின் போது ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பம் பெற்றோர் கையொப்பத்துடன்) 4 மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 (தலைமை ஆசிரியரிடம் கண்டிப்பாகச் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும்) அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ் போன்ற அனைத்து அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
அனைத்து மாணவர்களும் அனைத்துச் சான்றிதழ்களிலும் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் விண்ணப்பத்தில் பெற்றோர் கையொப்பத்தைப் பெற்று உள்ளே வரவேண்டும்.
காலை 09.30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. மாணவ-மாணவிகள் சேர்க்கையானது மதிப்பெண், இனம் மற்றும் சிறப்புப்பிரிவு அடிப்படையில் மட்டுமே சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.