உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆரணி அருகே ஊராட்சி செயலாளரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-06-08 07:57 GMT   |   Update On 2022-06-08 07:57 GMT
  • சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்
  • போலீசார் வராததால் பொதுமக்கள் தானாக கலைந்து சென்றனர்.

ஆரணி:

ஆரணி அருகே வேதாஜிபுரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஊராட்சியில் பல முறைகேடுகள் ஈடுபட்டுள்ளதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா ரங்கநாதன் ஆரணி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சித்ரா அருள்நாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி வேதாஜிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

உடனடியாக ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆரணி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

போலீசார் யாரும் வராததால் பொதுமக்கள் தானாக முன்வந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News