உள்ளூர் செய்திகள்

கோவில் வளாகத்தில் கால்வாயை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

கோவில் வளாகத்தில் கால்வாயை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-12 15:08 IST   |   Update On 2022-08-12 15:08:00 IST
  • புதிதாக கால்வாய் கட்டும் பணி நடைபெற்றது
  • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆரணி :

ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கிராம தேவதை பூவாடையம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் அருகே ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ரூ. 1லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பக்க கால்வாய் பணி நடைபெற்று தற்போது கிராம தேவதை பூவாடையம்மன் கோவில் வளாகம் அருகாமையில் உறிஞ்சி குழியுடன் கூடிய பக்க கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் அமைத்தது.

இதனை கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகில் உறிஞ்சி குழியுடன் கூடிய பக்க கால்வாய் அமைப்பதை அகற்ற கோரி திடிரென சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்த வந்த ஊராட்சி மன்ற நிர்வாகம் கோவில் அருகாமையில் அமைக்கும் உறிஞ்சி குழியுடன் கூடிய பக்க கால்வாய் அகற்றி மாற்று இடம் தேர்வு செய்யபடும் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News